GOVERNMENT OF INDIA
Accessibility
Accessibility Tools
Color Adjustment
Text Size
Navigation Adjustment
quiz picture
The Viksit Bharat Quiz Challenge (Tamil)
From Nov 25, 2024
To Dec 10, 2024
10வினாக்கள்
300 sec கால அளவு
Cash Prize
பங்குகொள்ளுங்கள்

About Quiz

வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் என்பது 2025 தேசிய இளையோர் திருவிழாவின் (NYF) மாற்றத்துக்கான புதிய காட்சியாகும். இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்க இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்க பிரதமரின் தொலைநோக்குப் பார்வையுடன் பொருந்தி, இந்த திருவிழா வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இளம் இந்தியர்களுக்கு தங்கள் எண்ணங்கள் மற்றும் பார்வைகளை பகிர்ந்துகொண்டு வளர்ச்சியடைந்த பாரதம் குறிக்கோளை எட்ட பங்களிக்க இந்த திறம்பட செயல்படும் தளம் உதவுகிறது.

வளர்ச்சியடைந்த பாரதம் வினாடி வினா சவால் இந்த வினாடி வினா சவால் இந்தியாவின் முக்கியமான மைல்கற்கள் மற்றும் சாதனைகள் குறித்த பங்கேற்பாளர்களின் அறிவையும் விழிப்புணர்வையும் பரிசோதிக்கும்.

தகுதி: 15 முதல் 29 வயதுக்குள் உள்ளவர்கள் மட்டும் பங்கேற்கலாம்.

Choose your Language

Gratifications

  • முதல் இடம் பெறுபவருக்கு ₹1,00,000/- ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
  • இரண்டாம் இடம் பெறுபவருக்கு ₹75,000/- ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
  • மூன்றாம் இடம் பெறுபவருக்கு ₹50,000/- ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
  • அடுத்த 100 பங்கேற்பாளர்களுக்கு தலா ₹2,000/- ஆறுதல் பரிசாக வழங்கப்படும்.
  • மேலும், அடுத்த 200 பங்கேற்பாளர்களுக்கு தலா ₹1,000/- கூடுதல் ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்.

பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் டிஜிட்டல் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.

Terms and Conditions

  1. இந்த வினாடி வினா போட்டி அனைத்து இந்திய குடிமக்களுக்கும் திறந்திருக்கும்.
  2. பங்கேற்பாளர் 'Play Quiz' பொத்தானை அழுத்தியதும் வினாடி வினா தொடங்கும்.
  3. வினாடி வினா 12 மொழிகளில் கிடைக்கும் – தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, மற்றும் தெலுங்கு.
  4. ஒரே பங்கேற்பாளரின் பல உள்ளீடுகள் ஏற்றுக்கொள்ளப்படாது.
  5. இது ஒரு நேர வரையறை கொண்ட வினாடி வினா: 300 வினாடிகளில் 10 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
  6. ஒருமுறை சமர்ப்பிக்கப்பட்ட பதிவை திரும்பப்பெற முடியாது.
  7. எதிர்பாராத சூழ்நிலைகளில், இளைஞர் நல மற்றும் விளையாட்டு அமைச்சகம் போட்டியின் விதிமுறைகளை மாற்றுவதற்கு அல்லது போட்டியை ரத்து செய்ய உரிமை கொண்டுள்ளது.
  8. போட்டி விதிமுறைகளில் உள்ள அனைத்து திருத்தங்களை பங்கேற்பாளர்கள் ஏற்க வேண்டும்.
  9. வினாடி வினா குறித்த இளைஞர் நல மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் முடிவு இறுதியானது மற்றும் பிணைப்புக்குரியது மற்றும் இது தொடர்பாக எந்த கடிதப் பரிமாற்றமும் மேற்கொள்ளப்படாது.
  10. அனைத்து வழக்குகள்/சட்ட புகார்கள் டெல்லி நீதிமன்றத்தின் கீழ்பட்டவை மட்டுமே. இதற்காக ஏற்படும் செலவுகளை பங்கேற்பாளர்களே ஏற்க வேண்டும்.
  11. கணினி பிழை அல்லது ஏற்பாட்டாளரின் நியாயமான கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட பிற பிழைகள் காரணமாக தொலைந்து போன, தாமதமான அல்லது முழுமையடையாத அல்லது அனுப்பப்படாத உள்ளீடுகளுக்கு ஏற்பாட்டாளர்கள் எந்தப் பொறுப்பையும் ஏற்க மாட்டார்கள். பதிவு சமர்ப்பித்ததற்கான ஆதாரம், அதைப் பெற்றதற்கான ஆதாரம் அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்.
  12. பங்கேற்பாளர்கள் வினாடி வினா எடுக்கும் போது பக்கத்தைப் புதுப்பிக்கக்(Refresh) கூடாது மேலும் தங்கள் பதிவைப் பதிவு செய்ய பக்கத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  13. அறிவிக்கப்பட்ட வெற்றியாளர்கள் தங்கள் MyGov சுயவிவரத்தில் பரிசுத் தொகையை வழங்குவதற்காக தங்கள் வங்கி விவரங்களை புதுப்பிக்க வேண்டும். MyGov சுயவிவரத்தில் உள்ள பயனர் பெயர் பரிசுத் தொகையை வழங்குவதற்கான வங்கிக் கணக்கில் உள்ள பெயருடன் பொருந்த வேண்டும்.
  14. பங்கேற்பாளர்கள் தங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் மற்றும் நகரம் ஆகியவற்றை வழங்க வேண்டும். இந்த விவரங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம், பங்கேற்பாளர்கள் வினாடி வினாவின் நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கிறார்கள்.
  15. இந்த போட்டியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இந்திய சட்டங்களால் நிர்வகிக்கப்படும் மற்றும் அனைத்து முடிவுகளும் இந்திய நீதித்துறைக்கு உட்பட்டதாக இருக்கும்.